பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி: (கேலிச் சிரிப்புடன்) சொன்ன உடனே முகமே மாறி விட்டதே...சரிய்யா இந்தா, இதோ பாரு...

[ஒரு குறிப்பேட்டை அவர் எதிரில் வீசி]

உமக்கு இஷ்டமானதைக் கொடும்.

[வந்தவர் தயக்க மடைகிறார் சமாளித்துக் கொண்டு 500 ரூபாய் என்று கை எழுத்துப்போடுகிறார். குறிப்பேட்டை மரியாதையாக சிங்கார வேலரிடம் தருகிறார்.]

சி: சபிச்சிக் கொட்டாதய்யா......இது சிங்காரவேலு வீட்டுக்கு அல்ல......ஏழைகளுக்கு...சரி...வந்த விஷயத்தைக் கவனிக்காமலே என்னன்னு கேட்காமலே இருந்து விட்டேனே...என்ன விஷயமா வந்திங்க.

வ: ஒண்ணுமில்லிங்க ஒரு புது வியாபாரத்தைப் பத்தி உங்களோட யோசனையைக் கேட்கலாம்னு...

சி: இருக்கிற வியாபாரம் போதல்லே, புதுசா வேறே வேணுமா...சரி ஆசை யாரை விடுது...சொல்லுங்க என்ன வியாபாரம் அது.

வ: சிலோனுக்கு வெங்காய ஏற்றுமதி செய்தா எதோ கொஞ்சம் கிடைக்கும்னு தெரியுது...

சி: கொஞ்சம் என்னய்யா நல்லாவே கிடைக்குது, அதனாலேதானே பேயா அலையறாங்க பலபேர். பர்மிட்டுக்கு...

வந்: நமக்கு அந்தக் கஷ்டம் இல்லிங்க...ஆறுகொடுத்து 'பர்மிட்' நம்ம பேருக்கு வருகிறபடி செய்துகிட்டேன். நம்ம சத்தார் சாயபுவோட பர்மிட்....

சிங்: (ஒரு கணம் தீவிரமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்தவராகி ஒரு வெடிச்சிரிப்பை உதிர்க்கிறார்.) பைத்யக்கார மனுஷன்யாநீர். ஆசை கண்ணை மறைக்குது. சத்தார் சாயபு பர்மிட்டையா வாங்கி விட்டீர், ஆறும்.....ரொக்கமாகவே கொடுத்தாச்சா.......போறாத வேலை...

வ: என்னதுங்க.....என்ன சொல்றிங்க......ஆறு அதிகம்னு சொல்றிங்களா ஆதாயம் கிடைக்கும்னு கணக்கு சொல்லுதே...

சி: கூட்டல் கழித்தல் கணக்கு இலாபத்தைக் குவிச்சிக் காட்டும் யா....யார் இல்லேன்னு சொல்றது...

வ: சிரிச்சிங்களே...போறாதவேளை என்று சொன்னிங்களே

324