இருப்பது அவளுக்கு ஒரு பெருமிதம் தருகிறது. ஒரு அதிகாரி எதிரில், எத்தனை உருக்கத்துடன் தன்னைப் பற்றித் தன் கணவர் பேசினார் என்பதை எண்ணி எண்ணி வீராயி பெருமிதம் கொண்டாள். சொத்து தேடிக் கொடுக்கவேண்டாம், சுகவாழ்வு அமைத்துத் தரவேண்டாம், இதயத்தில் ஏற்றமான ஒரு இடம் கொடுத்திருக்கிறாரே அதுபோதும்; ஒரு மாதுக்கு இதை விட மதிப்பும் மகிழ்ச்சியும் தரத்தக்கது வேறு என்ன இருக்கமுடியும் என்று எண்ணினாள். கேட்டீர்களா! கேட்டீர்களா! என் புருஷன் என்னைப்பற்றி என்னென்ன புகழ்ந்து பேசுகிறார் என்று கேட்டீர்களா. என்னை உத்தமி என்றார்! குணவதி என்றார்! புண்யவதி என்றார். என்னைத் தொடுபவன் கையை ஒடித்து விடுவேன் என்றார். என்னிடம் அவருக்கு அவ்வளவு அன்பு, பாசம்...நான் பாக்யசாலி! என்று ஊராரை அழைத்துக் கூறிடலாம் போல தோன்றிற்று. ஒருகணம், போலீஸ் வந்திருக்கிறதே, ஆபத்து தந்திருக்கிறதே என்பதைக்கூட மறந்து விட்டாள்...
வீ: போதுமுங்க...உங்களோட மனசு தெரிஞ்சி எம் மனம் பூரிச்சுப்போச்சிங்க...
ஐயா! அவர் என்பேரிலே இருக்கற அன்பினாலே அப்படிப் பேசினார்...நான் தான்யா திருடினேன்.
கரு: (பதறி) வீராயி! வீராயி! வேண்டாம்! எனக்காக நீ செய்ததெல்லாம் போதும்...இது வேண்டாம்...
வீ: நீங்க சும்மா இருங்க....நான்தான் திருடினேன்....நான்தான்...
கரு: உயிரின் பேரிலே ஆசை இல்லேன்னாவா, கிட்டே...என் உயிர் போனாலும் சரி...இவளை நீங்க இழுத்துக்கொண்டு போக விடமாட்டேன்.
338