பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/347

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
[கண்ணாயிரம் வெறுப்புடன் கூடிய புன்சிரிப்புடன்.]

க: கருப்பன் கூறும் உண்மை அவ்வளவும் அண்டப் புளுகு என்று நான் சொல்லவேண்டும்......

வ: (சிரித்தபடி) தம்பி வேடிக்கையாகப் பேசுதே......

சி: டேய் .... வேடிக்கை இருக்கட்டும். அங்கே போயும் ஏதாவது குளறித் தொலைத்துவிடாதே...தெளிவாக...

க: அழுத்தந்திருத்தமாகச் சொல்லவேண்டும்....

சி: ஆமாம்....ஆமாம்......

க: அண்டப் புளுகுகளை...அப்பா! நாமெல்லாமா அண்டப் புளுகு பேசுவது.....வயிற்றுச் சோற்றுக்கு வகையற்றவர்கள் செயல் அல்லவா அது. நீங்கள்தானே சொன்னீர்கள். (குத்தலாக} நான் பயந்தேபோனேன். நமது அப்பா இவ்வளவு அருமையாக உபதேசம் செய்கிறாரே பொய் பேசுவது தகாது என்று கூறுகிறாரே, இனி அவர் வியாபாரம் என்ன ஆகும் என்று பயந்து போனேன். இப்போது அந்தப் பயம் போய்விட்டது...

சி: போதும், போதும் உன் குறும்புத்தனம்.

க: பொய் பேசச் சொல்லி நீங்களே பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள்; அழுத்தந்திருத்தமாகப் பொய் பேசுவது எப்படி என்று இவர் கற்றுக்கொடுக்கிறார். நல்ல உலகமப்பா இது...நல்ல உலகம்...

[வந்தவர் அசடு வழியும் முகத்துடன் விடைபெற்றுச் செல்கிறார். கண்ணாயிரமும் மாடி செல்கிறான். சிங்காரவேலர் ஏதோ எண்ணிக்கொண்டு உலவுகிறார். சில்க் சட்டையும் 'கர்ல்' கிராப்பும் உள்ள தோற்றமுள்ள ஒருவன் வருகிறான். அவனை அழைத்துக்கொண்டு தனி அறை சென்று பேசுகிறார்.]

சி: நாட்டியமாடும் நாடியா பழக்கந்தானே...?

அவன்: அது ஏனுங்க. வேறே புதுமுகம்? சிட்டுப்போல பலது இருக்கு...

சி: இதோ பாரய்யா, நான் என்ன கேட்கறேன், எதுக்கு என்பதைத் தெரிந்துக் கொள்ளாமே...

அ: நல்லா தெரியுதுங்க, நாடியா கொஞ்சம் படபடன்னு பேசும்...

344