பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'மேக்கப்' அதிகம் இல்லாததால் முகத்திலே சோர்வு படந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. பளபளப்பு போய்விட்ட புடவை. கலைந்து போயுள்ள தலை. சிறிது கிழிந்து கிடக்கும் விரிப்பின்மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சுவற்றிலே, சினிமா நட்சத்திரங்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. நாடியாவின் நடனக்கோலத்தைக் காட்டும் படம் மாட்டப் பட்டிருக்கிறது. சிங்காரவேலரால் அனுப்பப்பட்ட ஆசாமி உள்ளே நுழையக் கண்டு ஆர்மோனியம் வாசிப்பதை நிறுத்தி விட்டு, எழுந்திருக்காமலே...?

நாடியா: வாங்கண்ணேன்! ஏது அத்தி பூத்தது போல.....

அவ: வரணும் வரணும்னு. ஆனா வெறுங்கையோட வரப்படாது பாரு, அதனாலே வரவில்லே

நாடி: அப்படின்னா இப்ப ஏதோ கச்சேரி கிராக்கியோட வந்திருக்கிறீங்கன்னு அர்த்தம்: இல்லையா?......

அவ: ஒரு வேலையாத்தான் வந்திருக்கறேன்......அதை முடித்துக் கொடுத்தயானா, ஒரு கச்சேரி என்ன, பல கச்சேரிகளை ஏற்பாடு செய்ய முடியும்......

நாடி: என்னண்ணேன், பீடிகை பலமாப் போடறிங்க.....என்ன வேலை அது......

அவ: ஒரு ஐந்து நிமிஷ வேலை......கோர்ட்டிலே சாட்சி சொல்லனும்........

நாடி: எந்த டிராமா 'காண்ராக்ட்'டரோடே தகறாறு......

அவ: அடடே! இது அந்தவிதமான விஷயமல்ல.....பெரிய இடத்து விவகாரம்...சிங்காரவேலர்னு ஒரு சீமான்...

நாடி: ஆமாம், தெரியும் அந்த ஆசாமி, சீமான்தான். ஆனா பெரிய மனுஷன்னு சொல்லாதே.....நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் எனக்குத் தெரியும்.

அவ: உனக்குத் தெரியுமா....எப்படி...

நாடி: அது பெரிய கதை அண்ணேன். இப்ப அவரு சொல்லித்தான் வந்திருக்கறியா......

அவ: நீயாகப் போகிற மாதிரி போய்வான்னு சொல்லி என்னை அனுப்பினாரு......நாடியா! காப்பி பலகாரம் வாங்கிவரச் சொல்லேன்.........

[பணத்தை எடுக்கிறான்]

346