நாடி: வேண்டாமண்ணேன்! காபி வேலையெல்லாம் முடிந்தது. வந்த விவரம் சொல்லு......
அவ: விவரம் என்னிடம் சொல்லவில்லை. எதோ கோர்ட்டிலே கேசாம்......நீ அவருக்காக சாட்சி சொல்ல வேணுமாம்......
நாடி: என்ன கேசுன்னு உனக்குத் தெரியாது அண்ணேன். தெரிந்திருந்தா வந்திருக்க மாட்டே. நம்மைப் போல ஒரு ஏழையைக் கெடுக்கறதுக்கு என்னை உடந்தையாக இருக்கச் சொல்றாரு. காலையிலே பூக்கடைக்காரர் விவரம் சொன்னாரு அண்ணேன்! நான் கோர்ட்டுக்குப் போகத்தான் போறேன், சாட்சி சொல்லத்தான் போறேன், ஆனா உண்மையைச் சொல்லப் போறேன்......இந்த ஆள் விழுங்கிப் பக்கம் பேசமாட்டேன்.......
அவ: நாடியா! அப்படிப்பட்டவர்களை விரோதிச்சிக்கக் கூடாதம்மா......நான் சொல்லறதைக் கேளு.....
நாடி: வேறே வேலையைப் பாரு வகையா வந்து மாட்டிக்கொண்டாங்க. பெரிய மனுஷனுங்க. சாயம் வெளுக்க வேணுமேல்லோ......விடுவனா?
அவ: எல்லா நம்ம சாயமுந்தான் வெளுத்துப் போகும்....
நா: விட்டுத்தள்ளு அண்ணேன்! நம்ம சாயம் இனிமேலா வெளுக்கப் போவுது......
அவ: என்ன வேண்டுமானாலும் தருவாரு......
நா: ஏன் தரமாட்டாரு எங்க மாமனாரு.....
அவ: என்னது; என்னது......
நா: அப்படித்தான் கோர்ட் பதறப் போகுது...கொல்லுன்னு சிரிக்கப் போகுது...அப்பொ அந்தப் பெரிய மனுஷன் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்றதைப் பார்க்கணும்.....
அவ: பெரிய கதையே நடந்திருக்குதுபோல இருக்குதே.....
நா: ஆமா......கோர்ட்டிலேதான் சம்பூர்ண பட்டாபிஷேகம்....(சிரிக்கிறாள்)
347