பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அம்மா? க: ('இருக்கிறார்கள்* அசைக்கிறான். என்று தெரிவிக்கத் தலையை சு: எனக்கொரு உபகாரம் செய்கிறாயா? களவாட வந்த வனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது, படமெடுத் தாடும் நாகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா? என் நிலைமை அப்படிப்பட்டது. அதனால் தான், யாரைக் கண்டால் பயத்தால் கூக்குரலிடவேண்டுமோ, அவனைக் கண்டு உதவி கேட்கிறேன். க: நம்ப முடியாத வேடிக்கையாக இருக்கிறதே. நான் என்ன உதவி செய்யமுடியும்? கள்ளனிடம் கேட்டால் எனக்குப் புரியவில்லையே. உதவி இந்த சு: எனக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. விஷத்தைத்தான் உதவிக்கு அழைத்தேன். நீ விஷத்தைவிடக் கொடியவனா ! நீ கட்டாயம் உதவி செய்யமுடியும். க: என்ன உதவி? சு : கள்ளனாக இருந்தது போதும். நாளைக்கு வேண்டுமானால் கூடக் கள்ளன் வேலைக்குப் போ. வேண்டாம். உன் ஆயுட்பரி யந்தம் திருடவேண்டிய அவசியமின்றி உனக்குப் பொருள் தருகிறேன். வேலை தருகிறேன். எனக்கு மட்டும் இப்போது. ஒரு உதவி செய், க: (புரியாமல் ) நானா? உதவியா ? என்ன உதவி? சு: கொஞ்சநேரம் என் காதலனாக இரு. க: (பயந்துபோய்) தாயே! கும்பிடுகிறேன். நீ வன தேவதையோ, மோகினியோ, என்னை ஒன்றும் செய்துவிடாதே, நான் தாய்க்கு ஒரே மகன்... இனி நான் சத்யமாகத் திருடுவதில்லை. சு: ஐயோ, ஐயோ! முட்டாளே! நான் தேவதையுமல்ல, பிசாசுமல்ல. உன்னிடம் உதவி கேட்கும் ஒரு அபாக்யவதி. கொஞ்சநேரம் -ஒரு மணி நேரம் என்னைத் தாயே, பேயே என்று கூப்பிடாமல், கண்ணே! மணியே! என்று கூப்பிடு. அஞ்சாதே, கொஞ்சிப் பேசு. க: (திகைப்படைந்து) நானா ? உன்னையா? சு: உண்மையாக அல்ல, பாவனையாக.

2

32