பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/360

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 11

இடம்:—மாளிகைக் கூடம்.

இருப்போர்:—சிங்காரவேலர், அன்னபூரணி, கண்ணாயிரம்.

நிலைமை:—சிங்காரவேலரும், கண்ணாயிரமும் வந்தது கண்டு, அன்னபூரணி ஆவலாக வருகிறார்கள்.

அ: என்ன தம்பி! ஆச்சி...

சி: ஆகவேண்டியது ஆச்சி...ஆறு மாசம் அந்தப் பயலுக்கு மூன்று மாசம் அவளுக்கு...

அ: பாவம்! போறாத வேளை என்ன செய்வது. அததன் விதிப்படி நடக்குது......இரு தம்பி! காப்பி கொண்டு வர்ரேன்.....

[உள்ளே போகிறார்கள்]

க: (குத்தலாக) காரித்துப்ப வேண்டுமாம் அப்பா! கேட்டீர்களா தீர்ப்பை. அண்டப்புளுகு பேசுபவர்கள் சமூக விரோதிகள், நாட்டுக்கே ஆபத்து...காரித் துப்பவேண்டும் என்கிறார் நீதிபதி...

சி: (சலிப்புடன்) சரி, சரி சும்மா விடு....போய்ப்படு.....

க: (பதறியபடி) கோழை! நான் ஓர் கோழை. அக்ரமத்துக்கு உடந்தையாக இருந்தேன்......சுயநலம், சுகபோகம் என்னைப் பிடித்தாட்டுகிறது......விடுபட முடியவில்லை.....அந்த ஏழைக் குடும்பம் என்னால் அல்லவா இந்தக் கதியாயிற்று......அந்த நாடியா! அவளுமா பச்சைப் புளுகு பேசுவது.....எனக்குத்தான் கற்றுக்கொடுத்தீர்கள் வக்கீல் வைத்து..... அவள்.....

சி: (கேலிச் சிரிப்புடன்) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்.....போடா மடப்பயலே! விவரம் தெரியாமல் போய் இப்படியெல்லாம் சிக்கிக்கொள்ளாதே.....எத்தனை காலம் நான் இருக்கமுடியும், கல்லுப்பிள்ளையார் போல......புத்தியோடு நடந்துகொள்......உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியான நடவடிக்கை இருக்கவேண்டும்.......

[கண்ணாயிரம் கண்களில் நீர் துளிர்த்திடும் நிலையினனாக மாடி செல்கிறான். அன்றிரவு பத்து மணிக்கு மேல் சிங்காரவேலர் ஏதோ குறிப்பு எழுதிக்கொண்டிருக்கிறார். வெளியே பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. பேய்க் காற்றால் மரங்கள் சாய்கின்றன; குடிசைகள்

357