க: என்னாலே ஒண்ணும் குடும்ப மானம் போகவில்லை.... ஊரிலே கேவலமாப் பேசறவங்க......என்னைப்பத்தி எதுவும் பேசல்லே......
சி: அப்படின்னா......
அ: (சலிப்புடன்) விட்டுத்தொலைடா தம்பி! கண்ணாயிரம், நீயும் ஏன் விதண்டாவாதம் பேசிக்கிட்டு இருக்கறே......
சி: பேசட்டும் அக்கா! பேசட்டும்னுதான் நானும் சொல்றேன்......மூடி மூடி ஏன் வைக்கவேணும்.....
டேய்! என்னைப் பார்த்துப் பேசு! சொல்ல நினைக்கறதை தைரியமாச் சொல்லேண்டா.......ஊரிலே எவனாவது ஒரு வார்த்தைப் பேசியிருக்கிறானா என்னைப் பத்தி, கேவலமா......ஏண்டா! ஊமையா நிற்கறே...எந்தப் பயலாவது பேசுவானா......
க: (தன்னை விடுவித்துக்கொண்டு) எப்படிப் பேசுவான்....பேசினா தொலைத்துவிடுவீர்களே என்ற பயம்.....உடனே ஏவி விட மாட்டீர்களா அடி, உதை, குத்து, வெட்டுன்னு........வியாபாரியா இருந்தா தீர்ந்தது, 'திவாலா'வான்.....விவசாயியா இருந்தா பயிரிலே மாடு மேயும், வைக்கப்போரிலே தீப்பிடிக்கும், களஞ்சியத்திலே கொள்ளை நடக்கும்.....தெரியுமே எல்லோருக்கும்...தெரிஞ்சி எவன் உங்க எதிரிலே துணிஞ்சிப் பேசுவான்......
சி: அக்கா! கேட்டயா அவன் பேசறதை.....கேட்டயான்னேன்....ஒண்னே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு சொல்றயே.....பார்த்தயா அவன் பேசியதை. ஊரிலே ஒரு பயலும் சொல்லத் துணியாததைச் சொல்றான். ஏண்டா! நான் காலிகளை ஏவி, கொல்லச் சொல்றேன், கொளுத்தச் சொல்றேன்.....ஏண்டா! அப்படித்தானே......
அ: எவனாவது உன்னை ஏதாவது ஏசி இருப்பான்......காதிலே விழுந்திருக்கும், அதைச் சொல்லவேண்டிய முறை தெரியாததாலே, எப்படியோ சொல்லிவிட்டான்.......
சி: ஓங்கி கன்னத்திலே அறையாமே அப்படிப்பட்ட கழுதையை, இங்கே வந்து என்னைக் கேவலமாப் பேசறதா.....ஒரே மகனல்லவா, ஒரே மகன்.....உயிருக்கு உலையா வந்திருக்கறான்....கொஞ்சமான பணமா பாழாகுது இவனாலே.....
46
361