க: அந்தப் பணம் அப்படித்தான் பாழாகும்......
என்று ஊரிலே பேசுகிறார்கள். ஏழை வயிறு எறிய எறியச் சேர்த்த பணம்தானே, அது இப்படித்தான் பாழாகும் என்கிறார்கள்.....எனக்கே கேட்க வெட்கமாக இருக்கிறது.....சொல்ல அதைவிட வெட்கமாக இருக்கிறது.
சி: இருக்காதே என் எதிரில் வெட்டிப் போட்டுவிடுவேன்......எனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்வேன்.....ஏழைக்காகப் பரிந்து பேசுகிறாயா, ஏழைக்காக! பெரிய மகான்! மடப்பயலே! என்னால் எத்தனை ஏழைக் குடும்பங்கள் பிழைக்கின்றன, தெரியுமா.....எத்தனை வீடுகளில் நான் விளக்கு ஏற்றி வைத்திருக்கிறேன் தெரியுமா....உனக்கு என்னடா தெரியும்.....உல்லாச உலகில் உலவிவருகிறாய், என் பணத்தைச் செலவழித்துக்கொண்டு. இதிலே உபதேசம் வேறு செய்கிறாயா உபதேசம்......
அ: (செல்லமாக) அவனுக்கென்னடா தலை எழுத்து உழைக்கணும்னு.
சி: (கோபமாக) அக்கா! குறுக்கிட்டுப் பேசாதே...
க: (அமைதியாக) பேசுங்களப்பா, பேசுங்கள். இம்சைக்கு ஆளான எத்தனையோ பேர் சொல்லத் துணியாததை நான் சொல்லிவிட்டேன், கோபம் கொப்பளிக்கிறது...உங்களுக்கு...பேசுகிறீர்கள்...உங்களாலா முடியாது முடுக்காகப் பேச.....
362