பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சே: தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? தே: சொல்லவேண்டியது, இனிமேல்தான் சேகர். நீ திடுக் கிடாமல் கேட்கவேண்டும். குறுக்கே எதுவும் பேசக்கூடாது. சுசீலா உன்னைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டாள். சே: வேடிக்கை பேச... செய்யப் தே: வயதுமல்ல, நேரமுமல்ல. நாளைக்கு சுசீலாவை ஜெமீன்தாரர் ஜெகவீரருக்கு மணமுடிக்க நிச்சயம் போகிறோம். சே : சுசீலா...? தே: சம்மதித்து விட்டாள். சே: நான் நம்பமுடியாது... சுசீலா தே: உலகமே நம்பாது. ஆனால். அது உண்மை. சம்மதித்தது, உன்னை மறந்ததால் அல்ல. என் உயிரைக் காப்பாற்ற. சே: தங்கள் உயிருக்கும் சுசீலா திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? தே: தம்பி என்னைப் பார். நான் கொலைகாரன் என்று சொன்னால் நம்புவாயா? சே: ஒருக்காலும் நம்பமாட்டேன். தே: கள்ளமில்லாத வெள்ளை உள்ளம்; ஆனால் உண்மை என்ன தெரியுமா? நான் கொலை செய்தவன். (சேகர் திடுக்கிடுகிறான்.) சேகர் பரிதாபத்துக்குரிய என் கதையைக் கேள். நான் வாலிபனாக இருந்தபோது, ஒரு அழகிய இளம் விதவையைக் காதலித்தேன். அவள் என்னைப் பரிபூரணமாக நம்பினாள். காதலில் மூழ்கினோம். கடைசியில் சமூகக் கட்டுப்பாட்டுக்கும் குடும்பக் கௌரவத்துக்கும் பயந்து, நான் அவளைக் கைவிட்டேன்... கர்ப்பவதியாக... இந்தக் கொடியவனால் கைவிடப்பட்ட அப்பெண் என் னென்ன கஷ்டத்துக்கு ஆளானாளோ தெரியாது. அடிக்கடி என் மனம் மட்டும் சுடும். ஆனால் கற்பழித்த காதகனான நான்,

39

39