பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொ: இதோ பாருங்கோ! ஏன் இப்படி வேஷம் போடறிங்க. தே: (களைப்புடன்) ஐயோ! வேஷமில்லையே! அப்பா! அம்மா! சொ: நிஜமோ, பாசாங்கோ தெரியலை; வேணுமானா எழுந்து போய்விடுங்க அவன். வருவதற்குள்ளே! நான் எக்கேடோ கெட்டுப் போகிறேன். தே: ஐயோ! என்னாலே முடியாதே ... அம்மா! சொ: பாவும்! நிஜமாகவேதான் விடியட்டும் பார்ப்போம். மயக்கமடைகிறார்] ஜுரம். பொழுது தேவரை எழுப்பி உட்காரச்சொல்லி கொஞ்சம் வெந்நீர் சாப்பிடச் சொல்கிறாள்] கை கொஞ்சம் வெந்நீர் குடியுங்க; நெஞ்சு உலர்ந்து போகுமே. (தேவரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. வெந்நீர் குடிக்கப் பாத்திரத்தை எடுக்கும்போது, உதறுகிறது. சொர்ணம், தேவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, வெந்நீரைக் குடிப்பாட்டு கிறாள். பாதியிலே பாத்திரம் அவள்மீது வீழ்ந்து, சேலை நனைந்து விடுகிறது. தேவர் அதற்குள் மயக்கமடைகிறார்; அப்படியே சொர்ணத்தின் மேல் சாய்கிறார். மெள்ள அவரைப் படுக்க வைத்துவிட்டு உடம்பின் மேலே ஒரு போர்வையை மூடுகிறாள். தலைவலி என்று ஜாடை காட்டுகிறார். தேவர். சொர்ணம் தலைமாட்டுப்பக்கம் அமர்ந்து தலையை அமுக்கு கிறாள். தோட்டக்காரன் வருகிறான். மருந்தைக் கொடுக் கிறான் ] ஏம்மா! இதோ பாரு. மருந்துகொடு. கதவைத் தாள் போட்டு கிட்டு படுத்துக்கோ. காலையிலே எழுந்ததும், கஞ்சி போட்டுக்கோ. நீயும் சமைச்சிச் சாப்பிடு. சாமானெல்லாம் இருக்கு. சொ: ஏண்ணா! எங்கே போறிங்க இந்நேரத்திலே. தோ: நேரம்னு ஒண்ணு இருக்கா நமக்கெல்லாம். நான் இங்கே ஒரு பெரிய வியாபாரி வீட்டிலே வேலைக்கு இருக்கறேன். வீடா அது, அரமனைதான். அங்கே எப்பவும் வேலை இருக்கும்.

55

55