பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 27 இடம்: மாளிகை உட்புறம். பாத்திரம்: சீமான் செட்டியார், வேலையாள், நண்பர்கள், (பிறகு) குத்தகைக்கார கோவிந்தன். (சீமான் சிங்காரித்துக்கொண்டிருக்கிறார். நண்பரும் வேலையாளும் ஓடி ஆடி வேலை செய்கிறார்கள்.) சீ: (நண்பனைப் பார்த்து) ஆமாம்! கச்சேரி, நன்றாக இருக்குமா? நண் ; அருமையாக இருக்கும். விலாசனி பாட்டிலே இருக்கும் விசேஷம் என்ன தெரியுமோ? மற்றவர்கள் பாடுவார் கள், அவ்வளவோடு சரி; இவ பாடும்போது, அந்த முகபாவம் இருக்கும் பாருங்கோ, முருக னென்றதுமே - எனக்கோர் மோகம் பிறக்குதம்மா!" என்று பாடுவா. அப்போ, மோகம்னு சொல்லுகிறபோது. மோகமேதான். அம்மா என்கிறபோது, அம்மா எதிரே வந்து நிற்பது போலத்தான் இருக்கும். . [நண்பன் அபிநயத்துடன் பாடிக் காட்டுகிறான். அதை நான் சொன்னால் புரியாது. நீங்க பார்க்கவேணும், பிறகு சீ: அப்படியா? ந: பாட்டுக்கு இடையிடையே ஒரு மோகனப் புன்னகை சிரிப்பு சீ: புன்சிரிப்பா!

16: ஆளை அந்தப் புன்சிரிப்பு என்ன செய்துவிடுது என்கிறீங்க. அவ, கல்யாணியில் ஆரம்பித்துக் காம்போதியில் போய்த்தான் முடிக்கட்டுமே, பெரிய வித்வான்கூட, அதைக் குற்றம்னு சொல்லமாட்டான். அவளேகூட, இராகம் தவறி விட்டதுன்னு சொல்லட்டும், அந்த மகா வித்வான், அட்டா! இராகமாகவது தவறுவதாவது! நீங்க பாடினது அபூர்வமான முறை அல்லவா! மற்றதுகள், ஏற்கெனவே பாடாந்திரமான இராகங்களைப் பாடுகிறதுகள். ஒரு புது இராகமே அல்லவா நீங்க உற்பத்தி செய்துவிட்டீர்கள் -என்று புகழ்வான்; எல்லாம் அந்த மோகனப் புன்னகைக்குத்தான்.

57