பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 39 இடம் :- சுசீலாவின் மாடி அறை. இருப்போர்:-சுசீலா. (சுசீலா, கட்டிலின்மீது கவிழ்ந்தவண்ணம் கொண்டிருக்கிறாள். மேஜைமீது. கதறிக் விஷக் கோப்பை இருக்கிறது. சேகர் உள்ளே பாய்ந்து, கோப்பையைக் கண்டு, அதை எடுத்துக் கொள்கிறான்.) சே: (மூச்சுத்திணற) அப்பா! நல்லவேளை ! [சுசீலா. சேகர் வந்தது கண்டு, அவன் கையிலே கோப்பை இருக்கக்கண்டு) சு : சேகர்! எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறாய். இந்தக் கடைசி உதவியைச் செய்து விடு. அந்த கோப்பையைக் கொடு. [சேகர், அவள் பேச்சைக் கவனிக்காமல் அறையில், அங்குமிங்கும் தேடி, ஒரு சீசாவைத் தேடி எடுத்து, அதிலே அந்த விஷத்தைக் கொட்டி, சீசாவைப் பத்திரப்படுத்திக் கொண்டு) சே: சுசீலா கண்ணே! எனக்கு நேரம் இல்லை, விவரம் சொல்ல. நமது வாழ்வுக்காகப் போரிடப் புறப்படுகிறேன். வெற்றி பெற்றால் விஷத்துக்கு வேலை இல்லை. தோல்வி அடைந் தால், நீ மட்டுமல்ல, இரண்டு கோப்பைகளிலே விஷம், கடைசீ. முத்தம், இருவரும் இறந்துவிடுவோம். (புறப்படுகிறான்.) சு: (திகைப்புடன்) தாங்கள், என்ன சொல்கிறீர்கள். சே: காத்துக்கொண்டிரு. மண ஓலை, அல்லது மரண ஓலை, இரண்டிலே ஒன்று விடிவதற்குள். இதோ வருகிறேன். (ஓடுகிறான்.]

81

81