பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் இருக்கு டாக்டர், இரண்டு இருக்கு; ஒண்ணை ஒண்ணு கேலி செய்துகிட்டு, விரோதிச்சிக்கிட்டு. காமம், குடி, களவு, கொலை,கலகம் யாவும் இரண்டு உலகிலேயும் உண்டு. உங்க உலகத்துச் சமாசாரம், வெளியே சுலபத்திலே வராது. எங்க விஷயம் ஊர்பூராவும் பரவிவிடும். நாங்க மொந்தையிலே இருக்கற கள்ளுமாதிரி, பொங்கி வழியறது. உங்க உலகத்துக் கெட்ட நடவடிக்கை, கார்க் போட்ட சீசாவிலே ஊத்தி அனுப்பற ஒசத்தி சரக்கு மாதிரி. (இருவரும் போகின்றனர்.) காட்சி 45 இடம் :- இடிந்த சுவரோரம். இருப்போர் :-ஒரு நோய்பிடித்த பெண், (பிறகு) ஜெகவீரன், (பிறகு) டாக்டர்,ரத்னம். [சுவரோரத்தில், விளக்குக் கம்பத்தருகே முக்கா டிட்டுக்கெண்டு, ஓர் உருவம் படுத்துக் கிடக்கிறது. ஜெகவீரன், குடிவெறியாலே, அங்கு வருகிறான். உருவத்தைக் கண்டு, தடியாலே போர்வையைத் தள்ளிப் பார்க்கிறான். அவள் எழுந்து, வெறி யாக இருக்கும் ஜெகவீரனைப் பார்த்து.) அவள்: யாருய்யா நீ? அன்யாயம் செய்யறே. படுத்துக் கிட்டு இருக்கறவளே தட்டி எழுப்பறே. ஜெ: (போதையில்) வா! வாடி இங்கே, பணம் தர்ரேன் பணம். அவள்: பணம் கொடுக்கறயா பணம் (அலட்சியமாக) எம்மாங் காசு கொடுப்பே? ஜெ: எம்மாங் காசு வேணும். அவள் : ஒரு ரூவா கொடுக்கணும்.

94

94