பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

 பொழுதும், புதிய அறிவு எல்லைகளே அடை முயலும் பொழுதும், சின்னபின்னமான அரணுக்கருகே அமர்வதில் நிறைவு கொண்டு, பழம்பல்லவி பாடியவாறு நாம் உள்ளோம்.

நம் சமயம் சிறைந்து சடங்குகளாகியுள்ளது. முன்பு சாதியும் வகுப்புமற்ற நம் சமூகம் சிதைந்து, சாதியும் சமயப் பிணக்கும் நிறைந்த இறுக்கமுள்ள அறைகளாகியுள்ளது. அதேகாலே, பழைமைக்கும் மூட நம்பிக்கைக்கும் அறிவார்ந்த விளக்கங்களே அள்ளி வீசி, அவற்றைப் பேணிப் பாதுகாப்பவர்களாகவே நாம் உள்ளோம். அல்லது வாயடங்கியுள்ளோம். இடித்துரை, எதிர்ப்பு ஆகியவற்றிற்கிடையேயும் அறியாமலேயே நாம் இந்நிலையினே நீடிக்க விடுப்போம். அதற்கு மேலும், நெஞ்சுரமிக்க வீரன் ஒருவன் நிலவும் சீர்க்கேடுகளே எதிர்த்துப் போரிட முன் வரும்பொழுது, பழங்கால ஏற்பாடு களேயும் உயரிய மரபுகளையும் அழிக்க வல்லவன் அவனென்று அவனே இழித்தும் பழித்தும் கூறுகின்ரறோம். இந்நிலையில், சமூகத்தின் பெரும் பகுதியினரின் சீற்றத்தினையும் ஏமாற்றத்தினேயும் எதிரொளிப்பவர் பெரியார் இராமசாமி ஆவார். ஏற்பாடுகளைச் சிதைய விடுவதும், அதேகாலே பகுத்தறிவு பரவப் பாடுபடுவோரை பழித்துக் கூறுவதும், மூட நம்பிக்கை யும், பழைமையும் நிலைத் திருக்க வழிசெய்வதும் தம் சமூகத்தை நாம் சிதைய விடுவதைத் தவிர வேறில்லே என்பதனையே காட்டுகிறது.

இவ்வரிய சிக்கல்களுக்குத் தங்குதடையில்லாத முழுமையான கலந்துரையாடல்களை அளிப்பதற்குரிய மன்றங்கள் பல்கலைக்கழகங்களேயாகும். இங்குப் பயிற்சி பெறும் பட்டதாரிகள் சமூகத்தைச் சீரமைக்கும் திருத்துதுவர்களாக வெளியேற வேண்டும். இச்சீரமைப்புப்பணி நீண்ட நெடுங்காலமாகச் செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

5

அண்ணுமலைப் பல்கலங்கழகப் பட்டதாரிகளே ! சாதிக்கு எதிரான புனிதப் போரினைத் தொடர்ந்து நடத்துமாறு, நான் உங்களை அழைக்கின்றேன். ஏனெனில், மக்களாட்சியுடனே