பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

 இன்புறுகிறோம் இசைத் தமிழை, முள்நீக்கிய பலாச் சுளைகளைப் போல்!

🞸🞸🞸

வாழை தோலை உரித்ததும் பழத்தைச் சுலபத்தில் உண்ண முடிகிறது. தோலை உரித்தவுடனே வெகு எளிதிலே பழத்தின் பண்பைப் பெறுகிறோம். அதே போலத்தான் முத்தமிழின் மூன்றாவது பிரிவு, நாடகமென்ற கூத்து.

முக்கனி, கனிவகைகளில் சிறந்து விளங்குகின்றன! மொழிகளிற் சிறந்து விளங்குகிறது முத்தமிழ்!!

🞸🞸🞸

தமிழர் வாழ்வு தழைக்க தமிழ் மணம் நாடெங்கும் செழித்துக் கொழிக்க, தமிழர் தமிழராய் வாழ, தன் மானத்துடன் வாழ, தமிழன் தன்னைத்தான் உணர்ந்து. தன்னம்பிக்கை பெற்றுத் தன்னையும், தன்னைச் சுற்றிலுமுள்ள சமுதாயத்தின் சூழ்நிலையைத் தெரிந்து--புரிந்து--தெளிந்து--வாழும் நிலைக்கான வகையில், வழியில், முறையில் முத்தமிழ் விளங்கவேண்டும். பயன்படவேண்டும்; பயன்படுத்தப்படவேண்டும்.

🞸🞸🞸

முத்தமிழ், சூழ்நிலையை மனித வாழ்வின் சூழ்நிலையை, வளப்படுத்தும்-- வகையிலே பண்படுத்தப்படவேண்டும்; பரப்பப்படவேண்டும்; பயன்படுத்தப்படவேண்டும்.

🞸🞸🞸

வாலிபர்களாகிய நீங்கள் இந்த மாணவப் பருவத்திலே, முத்தமிழிலே பற்றுக்கொண்டு, முத்தமிழ் மூலம், நாட்டின் நிலையை--சூழ்நிலையை நன்கு தெரிந்து, நாட்டின் எதிர்கால ஏற்றத்திற்கான பற்று--பாசம் பயிற்சி-- பெறவேண்டும்! பெற வேண்டும் பகுத்தறிவின் துணைகொண்டு!