பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு நாடுகளிலே விடுதலைப் போர் தொடுத்த வர்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சொந்தத் திலேயோ. வேறு நாட்டின் துணைகொண்டோ, இராணுவத்தைத் திரட்டுவது, போர்ப் பொருளைக் குவிப்பது; மறைந்திருந்து தாக்குவது; சதி செய்வது என்ற பல முறைகளைக் கையாண்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காக இவையாவும். எனவே சரியா? தவறா? என்ற கேள்விக்கும் இடம் இல்லை என்றனர்.

🞸🞸🞸

உலக வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தத் திட்டம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுப் புதியதோர் தத்துவத்தைக் கொண்ட திட்டத்தை, ஆயுதமின்றி இரகசியமின்றி, வெளிப்படையாகத் தூய்மையுடன் விலைதலைப் போர் நடத்தலானார்; அதிலே வெற்றி கண்டார், காந்தியடிகள்.

🞸🞸🞸

நல்ல மனிதர்களால் தான் நல்லாட்சி நடத்த முடியும், நாட்டுக்கு விடுதலையும் கிடைத்து மக்கள் நல்லவர்களாகாமல், கொலை பாதகர்கள், கொள்ளைக் காரர்கள், ஆதிக்க வெறியர்கள், ஆள் விழுங்கிகள், ஆஷாடபூதிகள் ஆகியோரின் ஆதிக்கம் அழிந்து படாதிருந்தால், விடுதலையால் என்ன பலன்? வேடனிட மிருந்து மீட்டு வந்த புள்ளி மானை; வேங்கையின் முன்பு துள்ளி விளையாட விடுவதா?

🞸🞸🞸