பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 அவர் இந்த மதம், அவன் அந்த மதம், என்று குரோதம் கொள்ளாதீர் என்றார். இது பெரியது இன்னொன்று தாழ்ந்தது என்று எண்ணாதீர் என்றார். தீண்டாமை போகவேண்டும் என்றார். அமளிக்கிடையே: நின்று படுகொலைகள் நடைபெற்ற இடத்திற்கெல்லாம். சென்று கூறிவந்தார்.

மக்களை நல்லவர்களாக்க வேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம், சுயநலம்,ஆதிக்க எண்ணம் ஒழிந்தாக வேண்டும். தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு, அதைப் புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக. அழகிய மலர்ச் செடிகளுக்கான விதைகளைத் தூவ அங்கு சென்றபோது புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வது போல், நாட்டை மீட்டு நல்லாட்சி அமைத்து, மக்களை நல்லவர்களாக்கு வதற்காகக் கருத்தைப் பரப்பும்போது, கிளம்பினான். கோட்சே மறைந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும்பாம்பை ஒழித் தாக வேண்டும். அவர், 'அனைவரும் ஒன்று' என்னும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார். அதை நாம் செய்து முடிப்போம், என்பதே நமது உறுதியாக இருக்கவேண்டும்.