பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பது போல் வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்றிருக்காது.

🞸🞸🞸

எவ்வளவு சிந்தனை எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பைப் பார்க்காமல், கேலி கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல், மூளை குழம்புமே, கண் குருடாகுமே என்று யோசிக்காமல், கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்த வர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான், அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது; அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

🞸🞸🞸

விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிரைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிக்கட்டி போல, குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம் போல் விஞ்ஞானம் மதிப் பற்றிருக்கிறது.

🞸🞸🞸

மதிப்புற்றிருக்க வேண்டிய பொருள் மதிப்பற்றிருப் பது நல்லதல்ல. விஞ்ஞானம் மதிப்புப் பெற மாணவர்கள் உழைக்கவேண்டும்.

🞸🞸🞸