பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


காற்று வீசாதபோது வேண்டுமானால் விசிறி கொண்டு காற்றைப் பெறலாம். விசிறியினால் வரும் காற்றைத் தடுக்கலாம். விசிறியை வீசி எறிவதால். ஆனால் காற்று இயற்கையாக வீசுவதைத் தடுக்க, ஏன் என்று கேட்க எவரால் முடியும்?

🞸🞸🞸

காஞ்சியிலே உள்ள பெரிய தேரிலே ஒரு மானை அமர வைத்துக்; தேரைக் கவனியாதே; மானைப்பார். அதன மருளும் விழிகளைப் பார்; அதன் உடலிலே உள்ள புள்ளிகளைப் பார் காதுகளைக் கவனி; என்றால் எத்தனைபேர் காண்பார்--காணமுடியும்; இது போலத் தானே புராணங்களில், பயனைத் தேடி அலைவதும்.

🞸🞸🞸

பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்டமுடியாது. அவர்கள் தீட்டியான பிறகு கோபிப்பது வீண்கவலை,

🞸🞸🞸

இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது--கவனிப் பாரற்றுக் கிடக்கிறது எழில் மிக்க விதவையைப் போல.

🞸🞸🞸

துவக்கத்திலே, பயன் பெரிதாகவும், தரம் சிறிதாகவும் இருக்கலாம். பயன் பெருகப் பெருக தரத்தைத் தானே உயர்த்திப் பண்படுத்திட முடியுமே!

🞸🞸🞸