பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இலக்கியங்கள்


தமிழரைத் தட்டி யெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை! தன்னம்பிக்கை யூட்டும் ஏடுகளே தேவை? மதியைப் பெருக்கி, விதியைத் தொலைத்திடும் விளக்க நூல்கள் ஏராளமாகத் தேவை!

🞸🞸🞸

கால வேகத்திற்கு ஏற்ற முறையிலே, விஞ்ஞானம் வளர்ந்து முன்னேறி வரும் இந்த நாளிலே, அகில உலகின் நிலையையும் விளக்கிடும் ஏடுகளைத் தமிழில் தமிழர்கட்குத் தரவேண்டும்.

🞸🞸🞸

மறு மலர்ச்சி என்றதும் மருண்டிடும் மனப்பண்பு. படைத்தவராகாது, மனவலிமை படைத்து, மனிதாபிமானத்தைத் துணைகொண்டு, மறுமலர்ச்சி நூல்களை எழுதுங்கள், எழுதுங்கள் என்று தமிழரை, தமிழ்ப் புத்தக வித்தகரைக் கேட்டுக் கொள்கிறேன்.

🞸🞸🞸

'புதிய மறுமலர்ச்சி ஏடுகளை எழுதுங்கள்; ஏழையின் துயரைப் பாடுங்கள்; ஏன் ஏழையானான் என்று கேளுங்கள்; ஏழையின் நிலையை, பாட்டாளியின் துயர வாழ்வைக் காவியமாக்குங்கள்; தொழிலாளியின் துயரை, துன்ப வெள்ளத்தை, நாட்டின் நானாவித நிலையை, மனித வாழ்வின் சூழ்நிலையை விளக்குங்கள்.' என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.

🞸🞸🞸

ஆரம்பத்திலே ஏற்படும் எதிர்ப்பைக் கண்டு மருள வேண்டாம்; தடைகள், தண்டனைகள், எதையும்