பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


தகாத ஏடுகள், தேவையற்ற நூல்கள் என்று தூரத் தூக்கியெறிந்துவிடத்தான் வேண்டும்!

🞸🞸🞸

ஆண்டவன் தோன்றமாட்டார்! ஆகவே ஆண்ட வனுக்காகப் பரிந்து பேசிடும் அடியார்களை. அறநூல் வல்லுநர்களைக் கேட்கிறேன்! 'சூலத்துக்கொரு நீதி' வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் காணப்படுவது நல்லதா? தேவைதானா?

🞸🞸🞸

இலக்கியங்கள் இத்தகைய விதி, மேலுலக வாழ்வு, குலத்துக்கொரு நீதி, என்ற மூன்று தத்துவங்களைப் போற்றும் முறையிலேயே, போதித்திடும் அளவுடனேயே அமைந்துள்ளனவே! இந்த மூன்று கருத்துக்களும் மக்களை நல்வழிப்படுத்திடப் பயன்படுகின்றனவா? மனிதன் மனிதனாக வாழ்ந்திடும் சூழ்நிலையை உண்டாக்கிடத்தான் பயன்படுகின்றனவா?

🞸🞸🞸

இலக்கியங்கள் மனிதனது எண்ணங்களை வளர்க்கின்றன; எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. கருத்துக்களை, பல தரப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய விளக்கங்களைத் தருகின்றன.

🞸🞸🞸

இலக்கியம் மனிதனது அறிவை வளர்க்கிறது; மனிதனுக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது; நன்மை தீமைகளை எடுத்துக் காட்டுகிறது; மனிதனது சிந்தனையைக் கிளறி விடுகிறது.

🞸🞸🞸