பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


பண்டைய இலக்கியங்கள் 'தரம்' உள்ள இலக்கியங்கள். அவற்றை பார்த்தால் ஆராய்ந்து, அலசி அவற்றின் 'தரத்தை', உயர்ந்த இலக்கியப் பண்பை, இலக்கிய மாண்பை அறிய முடியாது, பழிப்பர். அது மிக மிகப் பாபம், அடாத செயல் என்று பேசிடுவது, இலக்கியங்களுக்குத் 'தரம்', அல்ல. பண்டைய அவற்றிற்கு, உண்மையிலேயே, பெருமை தருவதுமாகாது! மாறாக, அவற்றின் 'தரம்' அற்ற தன்மையையும், தாழ்ந்த நிலையையும், சிறுமையையுமே, குறிப்பிடுவதாகத்தான் தோன்றுகிறது!

🞸🞸🞸

அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், அப்பாலேயே நிற்கட்டும்; மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை என்ற நிலைமை- சூழ்நிலை உண்டாகித் தீரும் நாள் வெகு விரைவில் வந்தே தீரும் என்பது நிச்சயம்,உறுதி!

🞸🞸🞸

பழமைமீது கொண்ட பற்றினால், பாசத்தால் பக்தியினால் புதுமை தேவையற்றது; புதுமையையும், பழமையிலேயே கண்டு மகிழ்ந்திடுவது, என்ற நிலையிலேயே இலக்கியம் இடம் பெயராது இருந்த இடத்திலேயே, இருக்கத்தான் வேண்டும் என்ற எண்ணமுடைய ராகவே, இன்றையத் தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாட்டுத் தலைவர்களும், தமிழ்ப் புத்தக வித்தகர்களும் விளங்கிடுவது நல்லதா? நாகரிக உலகில் வாழ்ந்திடும் நமக்கு, நல்லறிவு நாளுக்குநாள் பெருகிவரும், கால வேகத்திற்கேற்ற முறையிலே, தேவைதானா. இனியும்?

🞸🞸🞸