பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


மனிதனது சிந்தனை. தெளிவு, முன்னேற்றம் புராணத்தோடு, பழைய இலக்கியங்கள் கூறும் அளவோடு நிலைத்து நின்று விட்டிருந்தால்கூட இன்றைய சூழ்நிலை, நாகரிக வாழ்வு, நல்வாழ்வு உண்டாகியிருக்காது, உருவாகியுமிருக்காது என்பது உறுதி! மறுக்க முடியாத உண்மையுங்கூட!

🞸🞸🞸

பழமை, பழமை என்று பத்தாம் பசலிக் கொள்கையையே கொண்டிருந்தால், காலிகோ பைண்டு செய்து, பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மேலட்டைகளைக் கண்டிருக்க முடியாது! புராணகால இலக்கியங்கள் ஏடும் எழுத்தாணியுடனேயே, ஓலைச் சுவடிகளிலேயே, அடங்கிவிட்டிருக்கும். அனைவரும் படித்தறியும் புத்தகமாக, நூல் வடிவில், அச்சிடப்பட் டிருக்க முடியுமா? அல்லது, யாரோ, எந்த நாட்டிலோ, கண்டுபிடித்த அச்சுப் பொறியைத்தான் அதற்குப் பயன்படுத்தலாமா?

🞸🞸🞸

சிற்பிகளின் சிந்தனை, சிற்பங்களைச் செதுக்கிடும் அளவோடு நின்று, ஆண்டவன் ஆலயங்களை அழகுடன் அமைத்திடும் பணியோடு முடிந்திருந்தால் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், கோட்டைகளையும், கொத்தளங்களையும், சுற்றுச் சுவர்களையும் சூழ்ந்த மதில்களையும், மலையரண்களையும், கொண்ட மகத்தான மாபெரும் நகரங்களைக் கண்டிருக்க முடியுமா? நாடுகளைத்தான் பார்த்திருக்க முடியுமா?

🞸🞸🞸

உயர்ந்த இலக்கியங்கள், உத்தம இலக்கியங்கள் சிறந்த இலக்கியங்கள் என்பவையெல்லாம் எம்பெருமா-