பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


னைப்பற்றியேதான் இருந்திட வேண்டுமா? ஆண்டவன் அடியார்களைப் பற்றிய புராணங்களாகவே, புண்ணியத்தைப் போதித்திடும் பக்திரசப் பாடல்களாகவே பழமையை நிலைநாட்டிடும் பண்பு படைத்தவைகளாகவே விளங்கிடத்தான் வேண்டுமா இன்னும் இன்றையச் சூழ்நிலையிலும்?

🞸🞸🞸

இலக்கியங்கள் இன்று பெரும்பாலும் போதிக்கும் முதற்கருத்து, முக்கியக் கருத்து 'விதி' என்ற தத்துவமாகும்!

இந்த 'விதி' என்ற தத்துவம், இன்று மட்டுமல்ல, என்றுமே மனிதனுக்கு மகத்தான தீங்கிழைக்கும்; எக்காலமும் கேடுதரும் தத்துவமாகும்.

🞸🞸🞸

தமிழில் வரலாறுகளில் வரும் விடுதலை வீரர்களைத் தீட்டிக் காட்டுங்கள். விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்குங்கள். மத--மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெரியுங்கள். வாழ்ந்த இனம் ஏன் வீழ்ந்தது? எந்தக் காரணத்தால்? எந்தக் கருத்துக்களைக் கையாள நேரிட்டதால் என்றெல்லாம் கேளுங்கள்; விடை காணுங்கள்.

🞸🞸🞸

நாகரிக சாதனங்கள் பலவும் தோன்றி, உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டே போகும் இந்நாளில், நாம் புதுப்புதுக் கருத்துக்களை, எண்ணங்களை ஏற்பாடுகளை, வாழ்க்கை முறைகளை, நாகரிகச் சாதனைகளைத் தெரிந்து கொள்ள, புதிய இலக்கியங்கள் உண்டாக்கப் படவேண்டும், என்று கூறுவது கூடாதா, தேவை-

அ. 2--600