பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


தமிழ், தமிழ்ப் பேச்சு தமிழ் எழுத்து, தமிழ்ப் புலவர், தமிழ் புத்தகங்கள் என்றால் ஏதோ வேறு வழியற்றவன் விதியற்றவன் தமிழைக் கட்டியழுகிறான், என்றிருந்த காலம் மாறி, இன்று தமிழன், தமிழ் மொழி, தமிழினம், தமிழகம் தமிழ்த் திரு நாடு என்றெல்லாம் பேசப்படும் நிலை, தமிழினம் தமிழ் மொழியைப் போற்றிடும் நிலை, தன் மானங் கொண்டுள்ள நிலை--உண்டாகித்தானே இருக்கிறது?

🞸🞸🞸

அறியாமை இருளைக் கிழித்தெறிந்த அறிவுச் சுடர், ஆதிக்கக் கோட்டையைத் தகர்த்தெரிந்த பகுத்தறிவுப்யடைத் தலைவன், வக்கிர புத்தி கொண்ட வைதீகத்தின் வைரி, வால்டேர், "அரசாங்கம் என்னை அழிக்க முயற்சிக்கலாம். படை பலம் பாய்ந்து வரலாம், உலகே கேலியும் செய்யலாம். எனினும் நீதியை நிலைநாட்டி, ஏழையின் கண்ணீரைத் துடைத்தே தீருவேன்" என்று வீர முழக்க மிட்டுப் போரிட்டு வெற்றி கண்ட இலக்கிய வீரன், எமிலிஜோலா! ஆகியவர்களின் வரலாறும், அவர்கள் அளித்த அறிவுரைகளைக் கொண்ட ஏடுகளையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இதே முறையில், 'இங்கர்சாலின்' பகுத்தறிவு வசனக் கவிதைகள் எழுச்சியூட்டி என் மனதைக் கவர்ந்திருக்கிறது.

🞸🞸🞸

இயற்கை நுட்பங்களைக் கண்டறிந்து, மனித சமுதாயத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இதம் தந்து உலகைப் புதியதாய் வசதியாய் ஆக்கித் தரும் விஞ்ஞான வித்தர்களின் வாழ்க்கை. வரலாறுகளும், ஆராய்ச்சிகளும் இன்றைய நிலையில் சுவையும், பயனும்