பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


தந்து மக்கள் உள்ளத்தைக் கவரவல்ல, அருமையான நூற்களாக அமைகின்றன.

🞸🞸🞸

அறிவுத் துறையின் முனைகள் இப்போது ஒன்று பலவாகப் பெருகியபடி இருக்கிறது. பல்வேறு துறைகளிலே உள்ள பிரச்சினைகளிலே தெளிவும், பண்பாட்டுக்கு ஓர் விளக்கமும், சமுதாய அமைப்பு முறை, அரசு அமைப்பு முறை, அறநெறி ஆகியவை பற்றிய கருத்துறையும் ஒருங்கே கொண்டதாய் மக்களை, அறிவும் ஆற்றலும் அறமும் கொண்டவர்களாக்க வல்லதாய், அமைந்துள்ள பெருநூல் இன்று நமக்கிருப்பது திருக்குறள். நமது உள்ளத்தை கவருவது மட்டுமல்ல, திருத்தவும் உதவுவது.

🞸🞸🞸

அருட், எழுதிய 'நெப்போலியன் வரலாறு' கிப்பன் எழுதிய 'ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் இரு ஏடுகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன.

🞸🞸🞸

நாடு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலே, விடுதலை வீரர்களின் கதைகள் மனதைக் கவரும் அளவுக்கு, விருதா கிடைத்தான பிறகு, அதே வகை ஏடுகள், உள்ளத்தைக் கவருவதில்லை. இராண்டாவது அல்லது மூன்றாவது மாம்பழம் சாப்பிடுவது போலாகி விடுகிறது.

🞸🞸🞸

நீதிக்காகப் போராடியவர்கள், மேட்டுக் குடியினரின் அட்டகாசத்தை எதிர்த்து நின்றவர்கள். புனிதப் போர்வையில் உலவிய புலிகளிடமிருந்து மனமருள் கொண்ட மான்கூட்டத்தை விடுவித்தவர்கள்