பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


பார்க்கவும், தமிழ் அறிஞர்களிடமெல்லாம் பாடம் கேட்கவும் எண்ணம் பிறந்தது.

🞸🞸🞸

மகிழ்ச்சி ஊட்டுவது, புதிய எண்ணங்களைத் தூவுவது பழைய கருத்துக்களை மாற்றுவது பண்பு தருவது, செயல் புரியும் திறன் அளிப்பது என்பன போன்ற பயன்களைப் பெறுவதற்கே; படிக்கிறோம். ஒவ்வொரு வகைப் புத்தகமும் ஒவ்வொரு பயனை, ஒவ்வொரு அளவுக்குத் தருவதுடன் நமது மனதை உருவாக்க உதவுகின்றன.

🞸🞸🞸

மகிழ்ச்சியூட்டும் புத்தகம், செயலாற்றும் திறனைத் தந்தே தீருமென்றே புதிய எண்ணத்தைத் தூவும் ஏடு, மகிழ்ச்சி ஊட்டக்கூடிய இனிய நடை அழகுடன் இருந்தே தீருமென்றோ கூறமுடியாது.

🞸🞸🞸

நாரதரின் கானம் பற்றியோ, தேவலோகக் காட்சி பற்றியோ. சுவை தரும் விதமாகத் தீட்டப்பட்ட ஏட்டினைப் படிக்கும்போது. ஒருவகை இனிமை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், புதிய எண்ணம். விழிப்பு, செயலாற்றும் தன்மை ஏற்படுவதில்லை. பக்திப்பரவசத்துடன் அந்த ஏடுகளைப் படிப்போரும், போய்ப்பார்த்து விட்டே வரவேண்டும் நாரதரை என்று பயணப்படுவதில்லை.

🞸🞸🞸

மலேயாவைப் பற்றிய வரலாற்றுப் புத்தகத்திலே சுவை இருக்காது. எனினும், படிப்பவர்கள் வசதி-