பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


கிடைத்தால் அங்கு போய் வரலாம் என்ற எண்ணம் கொள்ளவும், செயலாற்றவும் முடிகிறது.

🞸🞸🞸

புராண இதிகாசக் கதைகளை நான் பள்ளிப் பருவத் திலே, படிக்க நேரிட்டபோது, அவை தேவையற்றவை என்ற கருத்தோ--அல்லது நம்மால் சாதிக்க முடியா தவைகளைக் கொண்ட ஏடுகள் என்றோதான் எண்ணம் ஏற்பட்டது.

🞸🞸🞸

உள்ளத்திலே சில சமயம் அதிர்ச்சி தரும், தரக லோக வர்ணனை, மண்டை ஆயிரம் சுக்கலாக வெடிப்பது, மலைப்பாம்பு விழுங்கி விடுவது போன்றவைகளைப் பற்றிப் படிக்கும்போது--ஆனால் நீண்ட காலம், அந்த ஏடுகளோ, அவைகளிலே குறிப்பிடப்பட்ட கருத்துக் களோ, மனதில் தங்கி இருந்ததில்லை. தினையுன்னும் பட்சிகள்போல அக்கருத்துக்கள்கூட்டம் கூட்டமாக வரும்; உள்ளத்தைத் தொடும். ஆனால், அறிவுத் தெளிவு எனும் ஆலோலம் கேட்கக் கேட்க அவை பறந்தே போய்விடும்- எனக்கு மட்டும் அல்ல. சராசரி அறிவுள்ள எவருக்கும்.

🞸🞸🞸

படித்துக் கொண்டிருக்கும் போதே நம்மைப் பரவசப்படுத்திவிடும் ஓசை நயமும், பொருள் செறிவும் கொண்ட புத்தகங்கள் மனதைக் கவரும் தன்மை உடையன. இந்த வரிசையிலே, என் மனதை மிகவும் அதிகமாக ஈர்த்த புத்தகங்களிலே, கலிங்கத்துப் பரணியை முக்கியமானதாகக் கருதுகிறேன். அத் தகைய ஏடுகள் சுவை தருவன--சுவை ஏற்படுகிறது. நிச்சயமாக--ஆனால் பயன் கருதிப் படிக்கும் பருவத்-