பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


திலே, வெறும் சுவை தரும் ஏடுகளாகிய கலிங்கத்துப் பரணி, குற்றாலக் குறவஞ்சி ஆகியவைகளைப் படிக்க நேரமும், நினைப்பும், இயற்கையாகவே ஏற்படுவதில்லை.

🞸🞸🞸

உள்ளம் வளருகிறது--சிந்தனையால், உலகில் உலவும் எண்ண அலைகளால், வாழ்க்கை எனும் ஆசிரியன் புகட்டும் பாடங்களால் இலட்சியங்கள், புதிது புதிதாகப் பிறக்கின்றன. இவைகளுக்கேற்ற வண்ணம், அறிவுத் தாகம் ஏற்படுகிறது. அந்தத் தாகத்தைத் தீர்க்கும் ஏடுகளை நாடுகிறோம்.

🞸🞸🞸

கம்பரின் கவித்திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை, ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம்.

🞸🞸🞸

நாங்கள் கண்டிப்பது கம்பரின் கவித்திறனையல்ல; அதன் தன்மையை, விளைவை என்பதை, அறிஞர்கள் தெரிய வேண்டுகிறேன்.

🞸🞸🞸

சன்யாட்சென் காலத்திலே, சீன மக்கள் பலப்பல தெய்வ வணக்கம் செய்து கிடந்தனர். சன்யாட்சென் அந்நாட்டுப் படித்தோரை அழைத்து, கடவுள்களின் பட்டியலைக் காட்டிக் கேட்டாராம், மக்களுக்கு ஒரு முழு முதற் கடவுள் இருந்தால் போதுமல்லவா என்று. ஆமென்றனர் அறிஞர். அப்படியானால், இந்தப் பெயர் வரிசையிலே ஒன்று வைத்துக்கொண்டு, மற்றவற்றைச் சிகப்புக் கோடிட்டு விடுக என்று செப்பினாராம். பிறகு, ஒன்றே தேவன் என்றனர் மக்கள். இங்கோ