பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


தமிழனின் கலை, கம்பராமாயணத்தில் ஆரம்பமாகி, அத்துடன் முடிகிறது என்று எந்தப் பண்டிதரும் கூற மாட்டார் என்று நம்புகிறேன். கலப்புக் கலையும்.. ஆரியப் பொய்க் கற்பனைகளும் புகாமுன்பே, தமிழன் தனியான கலையை முதல், இடை, கடைச் சங்க காலங்களிலே வளர்த்தான் என்பது யாவரும் அறிந்ததே.

🞸🞸🞸

நான், தன் காலக்கருத்தை அப்படியே எடுத்துக் கூறும் கவியைவிட, தன் காலத்துக் கருத்தை அதற்கு முற்பட்ட காலக்கருத்துடனும், தன் அறிவில் தோன்றும் கருத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்து, தன் காலத்திலே மக்கள் கொண்ட கருத்து ஏதேனும் தவறு எனத் தனக்குத் தோன்றினால் அதைத் திருத்தி, மக்களை நல்வழிப்படுத்த தன் நூலிலே தைரியமாகக் காட்டும் கவியையே, அதிகம் பாராட்டுவேன்; முதல்தரமான கவி என்பேன்.

🞸🞸🞸

கம்பர் மக்கள் சென்ற வழிச் சென்றாரே தவிர தனி வழி காட்டவில்லை. நற்கவி, அதைச் செய்ய வேண்டுமென்பது என் எண்ணம்.

🞸🞸🞸

இங்கு வானை முட்டும் மலைகள், வற்றாத ஆறுகள், வளமான வயல்கள், கனி குலுங்கும் சோலைகள் ஏராளம்; முத்து உண்டு எமது கடலில்; தங்கம் உண்டு எமது பூமியில் என்று ஆனந்தக் களிப்புச் சிந்து பாடியிருக்கிறோம். எல்லாம் சரி; உமது நாட்டு கல்வி நிலையைக்