பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


கூறு என்று கேட்டால், நாம் வெட்கித் தலைகுனியும் நிலையில் இருக்கிறது.

🞸🞸🞸

நாட்டு மக்களிலே மிகப்பெரும்பாலானவர்களுக்குக் கூரிய வாள், பலமான கேடயம், அஞ்சா நெஞ்சு; ஆனால் அந்த வீரனின் பழுது, இந்நிலை நாட்டுக்குச் சிறப்பும் அளிக்காது. நல்லாட்சிக்கு வழி கிடைக்காது.

🞸🞸🞸

நாட்டு நிலை, உலக நிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாறவேண்டும். "வீட்டிற்கோர் புத்தக சாலை" என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நிலை ஏற்படச் செய்யவேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை.

🞸🞸🞸

மலை கண்டு, நதிகண்டு, மாநிதி கண்டு அல்ல ஒரு நாட்டை உலகம் மதிப்பது--அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும்.

🞸🞸🞸

வீட்டில் அலங்காரத்தையும், விஷேச கால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பதுபோல, வீட்டிற்கோர் புத்தகசாலை. சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்டவேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும்.

🞸🞸🞸