பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப்பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி. புத்தக சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை--அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.

🞸🞸🞸

பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல ஏற்கனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்து போகச் செய்வதற்குப் பல புத்தகங்கள் தேவை. நமது மக்களுக்குக் கைலாய காட்சிகள். வைகுந்த மாகத்மியம், வரவட்சுமி நோன்பின் மகிமை, நாரதரின் தம்பூரு, நந்தியின் மிருதங்கம், சித்ரா புத்திரனின் குறிப்பேடு, நரகலோகம், அட்டைக்குழி, அரணைக்குழிகள், மோட்சத்தின் மோகனம், இந்திர சபையின் அலங்காரம், அங்குப் பாடி ஆடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும். ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும்; அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வானைக்கும் ஏசல் நடந்தது தெரியும். இவையும் இவை போன்றவையும் ஏராளமாகத் தெரியும்.

🞸🞸🞸

நந்தி துர்க்கமலை எங்கே? தெரியாது என்பர். நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலை கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை? சொல்லத் தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன; கணக்கு அறியார். தாராபுரம்