பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


எந்தத் திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர் பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாகாணத்தின் வருமானம் என்ன? தெரியாது என்பர். மாகாணத்தின் வருமானம் என்ன? அறியார்கள் - அறிந்துகொள்ளவும் முயலமாட்டார்கள். அனுமத்பிரபாவம் தெரியும்; அரச மரத்தை சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதைக் கூறத் தெரியும். பேய், பில்லி சூனியம் பற்றிய கதைகளைக் கூறத் தெரியும்: அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெரியாது. அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக்கப்போகும் கருணானந்த சுவாமிகளின் கால்பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும்.

🞸🞸🞸

புத்தகசாலை அமைப்பது என்று திட்டமிட்டுப் புதுவருஷ பஞ்சாங்கத்தில் ஒரு மூன்று தினுசும், பழைய பஞ்சாங்கக் கட்டு ஒன்று, பவளக்கொடி மாலையும் பஞ்சாமிர் தச் சிந்தும், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதையும் பேய் பேசிய புராணமும், நல்லதங்காள் புலம்பலும் அரிச்சந்திரன் மயானக்காண்டமும், ஆகியவற்றை அடுக்கிவைத்தால், நாம் கோரும் மனவளம் ஏற்படாது, நமது நாட்டை வஞ்சகர்களுக்கு ஏற்ற வேட்டைக்காடு ஆக்கும் தீக்குச்சி சேர்ப்பது போலாகும்.

🞸🞸🞸

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச்