பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


சேகரிக்கவேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து, அதற்குப் புத்தகசாலை யென்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டிவைத்து அவர்கள் உள்ள இடத்துக்கு, வழி காட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும். வசதி கிடைத்ததும். வசதி ஏற்படுத்திக் கொண்டதும். அமைக்க வேண்டிய புத்தக சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள், இவை முதலிடம் பெறவேண்டும்.

🞸🞸🞸

பஞ்சாங்கம் அல்ல புத்தகசாலையில் இருக்க வேண்டியது அட்லாஸ்--உலகப் படம் இருக்க வேண்டும்.

🞸🞸🞸

புலியை அழைத்துப் பூமாலை தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தன வாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.

🞸🞸🞸

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்று அந்த நாட்களில்; நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று அந்த நாட்களில்--நமது சரித்திர அறிவு பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது