பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் நிலை


தன்மானத் தோழர்களே! வீறுகொண்டு எழுங்கள்! வீழ்த்துங்கள் வீணரை! உயர்த்துங்கள் உழைப்பாளியை! மடமையை மடியச் செய்யுங்கள்! மானமாய் வாழுங்கள்! அறிவே துணை அன்பே குணம் எனக் கொள்ளுங்கள்!

🞸🞸🞸

ஒரு நாட்டின் நிலை, அதன் நினைப்பை உருவாக்குகிறது. உன்னத நிலையிலுள்ள நாட்டின் நினைப்பு உயர்ந்திருக்கும்; தாழ்ந்த நிலையிலுள்ள நினைப்புத் தாழ்ந்திருக்கும்.

🞸🞸🞸

ஒரு நாட்டின் நாட்டின் நினைப்பைப் பார்த்துத்தான் அந்நாட்டின் நிலை மதிப்பிடப்படும்.

🞸🞸🞸

தாழ்ந்த தமிழகத்தை உயர்த்தவேண்டும் என்றும், இன்று மக்கள் மனதில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை--தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறான கருத்துக்களை அகற்றி, ஆங்கே பண்டைய உயர்ந்த கருத்துக்களைக் குடியேற்ற வேண்டும் என்றும் நினைப்புகள் தோன்றியிருக்கின்றன. இந்த நினைப்புகள் பாமர மக்கள் மனத்திலும் தோன்ற, நாட்டில் எங்கும் அறிவுப் பிரச்சாரம் செய்யப்படவேண்டும்.

🞸🞸🞸

பாமரரிடம் படிப்பு இல்லை; படித்தவர்களிடம் பண்பு இல்லை. இன்று சொல்லித் தரப்படுகின்ற பாடமுறையே மாற்றி அமைக்கப்பட வேண்டும்

🞸🞸🞸

சுக்கு நூறாகிவிட்ட கலம், கடலடி சென்று ஆண்டு பல ஆன பிறகும், விஞ்ஞானக் கருவிகளின் மூலம்