பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


இந்த நாட்டை ஏழை நாடென்று எவராவது கூறமுடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெயரால் கோயிலாகவும், வாகனமாகவும், ஆண்டவன் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது.

🞸🞸🞸

நாட்டிலே பொருள் இவ்விதம் ஒரு மூலையில் குவிந்து முடக்குவாதமாய் முடங்கிக்கிடக்க, மக்கள் பசியென்றும், பிணியென்றும் பதறி அழுகின்றார்கள்; பகவானைப் பிரார்த்திக்கின்றார்கள் பசிப்பிணி நீக்கிட படையல் போட்டு. என்ன பரிதாப நிலை?

🞸🞸🞸

தர்ம சத்திரமென்றும், மடமென்றும் கட்டி ஒரு சிலரை உழையாது உண்ணும் சோம்பேறிகளாக்க வசதியளிக்கிறோம். இது தகுமா? நீதியா? இதுதான் அறமா?

🞸🞸🞸

கோயில்களிலே உள்ள ஆயிரங்கால் மண்டபங்களெல்லாம் கல்விச் சாலைகளாய், ஆராய்ச்சி நிலையங்களாய் மாறினால், நூற்றுக்கால் மண்டபங்களெல்லாம் நூல் நிலையங்களாய், வாசகசாலைகளாய் மாறினால், மக்கள் மடமையினின்றும் விடுபட்டு மதியைப் பெறுவது எத்தனை எளிது என்று சிந்தியுங்கள் தோழர்களே!

🞸🞸🞸

எவ்வளவோ இயற்கை வளம் பெற்ற இந்த நாட்டில் எல்லாச் செல்வங்களையும் படைத்த ஆண்டவர்கள் அநேகர் வாழும் இந்த நாட்டில்--பிறந்து வளர்ந்து உணவின்றிப் பசியுடன், வாழவும் வகையற்று, ஒரு