பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


வாழ்வு என்பது அனைவருக்கும் உள்ள உரிமை இதைப் பறிக்கும் முறையில் உள்ள அமைப்புக்கள் அழிக்கப்படவேண்டியன.

🞸🞸🞸

சமுதாயத்திலே புதிய துறைகள், அதன் அமைப்பிலே புதியதோர் மாற்றம் தேவை. அந்தப் புதிய உருவத்தை உருவாக்கும் உயரிய பணிதான் மறுமலர்ச்சி.

காலவேகம்! காலவேகம், மனித வாழ்வைப் பலப்பல விதங்களிலே மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது.

விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு. தீங்கு!

🞸🞸🞸

விதி என்னும் சதி

விதிக்கு நாம் அடிமைப்பட்டது அந்நியனுக்கு அடிமைப்பட்டதற்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே; விதி நமது பரம்பரை நோய் - பூர்வீகச் சொத்து; ஆஸ்ரமத்திலே பிறந்தது; அரண்மனையிலும், குடிசையிலும், சரிசமமாகப் படர்ந்த பழம் பெரும் நோய். ஜொலித்திடும் சாம்ராஜ்யங்களும், மணங் கமழும் கலை நயங்களும், காவியமும் வீரமும் செல்வமும் மேலோங்கியிருந்த நாட்களிலேயே இந்த நோய் நம்மைப் பிடித்து ஆட்டிப் படைத்தது. ஆனால் புண்ணின் கெட்ட வாடை வெளியே தெரியாதிருக்க, பன்னீர்கொண்டு அதனைக் கழுவிப் புனுகு பூசி, மறைத்திடுதல், போல நாம் சாம்ராஜ்யச் சிறப்பு, கலையழகு என்னும் பல்வேறு பூச்சு வேலைகளினால் புண்ணின்