பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


விதியென்ற தத்துவத்திற்கு. ஆகவேதான் அதனை உதறித் தள்ள நெஞ்சு உரம் பலருக்கு வருவதில்லை.

🞸🞸🞸

மேலுலகத்தில் ஏதோ ஓர் பெரும் ஏடு இருப்பது போலவும், அதிலே பூலோகவாசி ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பும் முன் கூட்டியே எழுதி வைக்கப்பட்டிருப்பது போலவும், அதன்படிதான் சகல காரியமும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பல வழிகளில் இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தினர். எவ்வளவு பெரிய கேடு செய்கிறோம் என்பதை அறிந்தார்களோ இல்லையோ, மனிதன் மனதை முடமாக்குகிறோம், கருத்தைக் குருடாக்குகிறோம் என்று தெரிந்து செய்திருந்தால், அவர்கள் மாபெரும் துரோகிகள்; தெரியாமல் செய்திருந்தால் ஏமாளிகள், கபடராயினும், கசடராயினும் அவர்கள் கட்டிவிட்ட கதைகள், இந்த நாட்டு மக்களைத் தலைமுறை தலைமுறையாகக் கெடுத்து விட்டது--தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்தது--முயற்சிகளை முறியடித்தது--முற்போக்கைக் கெடுத்தது.

🞸🞸🞸

முயற்சி பலனளிக்காதபோது, திட்டம் தகர்ந்து விடும் போது, நோக்கம் ஈடேறாதபோது, ஏன் முயற்சி பலிக்கவில்லை; திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை; நமது கணக்கு ஏன் பொய்த்துப் போயிற்று; காரணம் என்ன என்று கண்டுபிடிக்க, ஆராய்ச்சி செய்ய, திருத்தம் தர, இந்த 'விதி'யெனும் தத்துவம், மனிதனை விடுவதில்லை.

🞸🞸🞸

இந்த விதியை வெல்ல, அல்லது முன் கூட்டியே தெரிந்து கொள்ள, மாற்ற, திருத்த, ஏதாவது