பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


செய்யலாமா என்ற ஆசை கிளம்பலாயிற்று. அதனைப் பூசாரிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள் என்போர் பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் வாழ்வு நடத்த, பிறகு அவர்கள் அந்த வாழ்விலே கிடைக்கும் சுகத்தை இழக்க மனமின்றி விதியை மக்கள் நம்புவதற்காக, மேலும் மேலும் கற்பனைக் கதைகளைக் கட்டி விடலாயினர்--கடவுளின்மீது ஆணையிட்டு எதையும் பேசினர்--ஏழை ஏமாளியானான்.

🞸🞸🞸

விதிக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை நிச்சயமாக. நாம் எதிர்பார்த்ததைவிட, விரைவில் ஒழியத்தான் போகிறது - அசைவும் ஆட்டமும் கொடுத்து விட்டது.

🞸🞸🞸

இப்போது மட்டும், இந்நாட்டு எழுத்தாளரும், பேச்சாளரும், இசைவாணரும், படப்பிடிப்பாளரும் அறிவுத் துறைக்குத் துரோகம் இழைக்காமல், மீண்டும் மீண்டும் விதிக்கு அடிமையாகும் வேதனைக்கு எரு இடாமல் அதற்கு ஆதாரமாக உள்ள கற்பனைக் கதைகளைக் கருத்துக்களைப் பரப்பாமல் விதி பற்றிய எண்ணத்தை, விடவேண்டிய அவசியத்தை, விதிக்கு அடிமைப்படாமல் இருந்தால் எவ்வளவு நலன் நாட்டுக்குக் கிடைக்கும் என்பதை--எத்தன் எப்படி வஞ்சிக்கிறான் என்பதை விளக்கத் தமது அறிவையும், திறமையையும் ஒரு பத்து வருஷ காலத்துக்குப் பயன்படுத்த முன் வந்தால்...நிச்சயமாக, உறுதியாகக் கூறலாம் விதிக்கு அடிமைத்தனம் ஒழிந்தே தீரும் என்று.

🞸🞸🞸

விதி என்றும், சப்மரைன், டார்பிடோ, விமானம் விஷப்புகை, வெடிகுண்டு இவைகளைப் போன்ற படைக்-