பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


கலங்களைக் கொண்டு இல்லை. அப்படிப்பட்ட படைக்கலங்களைக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நமக்கு இந்த நாளில் சாதாரண ஏடுகள்--அதிலும் காலமெனும் செல்லரித்த ஏடுகள், அவைகளிலே காணப்படும் கருத்துக்குக் குழப்பம் தரும் கற்பனைகள், அந்தக் கற்பனைகளை நம்பிப் பிழைக்கும் கபடர்கள் ஆகிய இவ்வளவு படைக்கருவிகளை மட்டுமே கொண்டுள்ள விதிக்கு அடிமைத்தனம் பழமையை முறியடிப்பது முடியாத காரியமல்ல.

🞸🞸🞸

மனிதன் முன்னேற

மனிதன் மனவளமும், மனத்திடமும், நல்லறிவும் பெறவேண்டும். ஆராயுந்திறனை அடைந்திடவேண்டும். பகுத்தறிவும் பண்பும் படைத்தவனாக வாழவேண்டும். இந்தச் சூழ்நிலையை அமைத்தாக வேண்டும். மனிதத் தன்மையோடு வாழ பகுத்தறிவைப் பரப்பும் நிலை, மனிதனை 'மனிதன்' என்ற எண்ணத்தோடு வாழ வைக்கும் சூழ்நிலை தேவை, உடனடியாகக் தேவை.

🞸🞸🞸

பழைய காலத்தைப்போல நாம் நடக்க முடியாது. நடக்கத்தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக் கொள்ளவேண்டும்.

🞸🞸🞸

கடவுள் என்றும், மதம் என்றும், சாஸ்திர சடங்குகள் என்றும் மக்கள் தங்கள் காலத்தையும், கருத்தையும் நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும் ஊக்கத்-