பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


தையும், பணத்தையும் பகுத்தறிவையும் சிறிதும் பயன்படுத்தாது பாழாக்குவதைத் தடுத்தாக வேண்டும்.

🞸🞸🞸

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடன் வாழ்ந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மக்கள் உணர்ந்து, இனத்தால் ஒன்றுபட்டு வாழும் முறையை மக்களிடையே எங்கள் கழகம் ஏற்படுத்தி வருகின்றது.

🞸🞸🞸

சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டே மனித வாழ்வு நடக்கிறது!

🞸🞸🞸

சூழ்நிலை மனிதனை மனிதனாக்குகிறது; மனிதத்தன்மையற்ற மிருகமாகவுமாக்குகிறது! சூழ்நிலை, மனிதனை மகா புருஷனாகவும் உயர்த்துகிறது; மாபாவி யாகவும் தாழ்த்துகிறது!

🞸🞸🞸

மனிதன் பொய் பேசுவதும்--புரட்டுகள் செய்திடுவதும், அஞ்சுவதும், அக்கிரமங்கள் செய்வதும், ஆள்வதும், ஆளப்படுவதும், வாழ்வதும் வீழ்வதும் உயர்வதும்--தாழ்வதும் சூழ்நிலையைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

🞸🞸🞸

ஏனப்பா ஏக்கம், என்ன வருத்தம் உனக்கு என்று கேட்டவுடன் ஏக்கத்திற்கு விளக்கந்தராது வருத்தத்தின் காரணத்தை விளக்கிடாது. "எல்லாம் என் தலைவிதி' என்று தலையிலே அடித்துக் கொள்கிறானே மனிதன்; அந்த நிலைமை மாறி, மனிதன்