பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


தனது வருத்தத்திற்கும், வாட்டத்திற்கும் தனது உழைப்பும், ஊக்கமும். அதற்கான சூழ்நிலையுமே காரணம் என்ற சூழ்நிலையை, தன்னைச் சுற்றிலுமுள்ள நிலையை நன்கு உணர்ந்து, அலசிப் பார்த்து, ஆராய்ந்து தெளிந்து, சூழ்நிலைக்கேற்ப நடக்கவும், தனக்கும், பிறருக்கும், சமுதாயத்திற்கும் நன்மை தரும் சூழ்நிலையை உண்டாக்கும் சூழ்நிலையின் தன்மையறிந்தவனாக மாறவேண்டாமா?

🞸🞸🞸

விதி, விதி, என்று தனது மதியை மதிக்காது, மந்த மதி படைத்தவனாகவே தமிழன் வாழத்தான் வேண்டுமா? ஆண்டவன் விட்டவழி என்று கிடந்து தன்னம்பிக்கையற்ற தமிழனாகவே - தாழ்ந்த தமிழனாகவே தமிழன் வாழக்கூடாது. இனியும்!

🞸🞸🞸

தனி மனிதன் 'தரம்' உயர்ந்தால் போதும்; தனி மனிதன் 'பண்பு' வளர்க்கப்பட வேண்டும். தனி மனிதன் தரம், பண்பு வளர, உயர உயர, சமுதாயத்தின் தரமும் பண்பும் தானே வளரும்; உயரும் என்றெல்லாம் பேசப்படுவது தவறு, சரியல்ல! நடை முறைக்கு ஒத்து வராத தத்துவம், அது!

🞸🞸🞸

எத்தனை யெத்தனையோ மகான்களும், மகாத்மாக்களும், அடியார்களும் ஆழ்வார்களும், ஆண்டவன் தூதர்களும், ஆண்டவன் அவதாரங்களும், தோன்றிய பின்னரும்கூட மனிதரது நிலை உயரக்காணோமே? ஏன்? . எந்தக் காரணத்தால்? தனி மனிதனது தரமும் பண்பும் அவனவன் சூழ்நிலைக்கேற்ப அமைகிறது என்பதுதானே உண்மைக் காரணம்.

🞸🞸🞸