பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


விதி என்ற நம்பிக்கை, மனிதனை வாழவிடவில்லை. வாழ்க்கையின் முன்னேற்ற எண்ணம் அவனிடம் தோன்றவில்லை! இது அவனது சூழ்நிலை. அர்த்தமற்ற, அறியாமை நிலை!

🞸🞸🞸

திருடன், பொய்யன், புரட்டன்--என்றும் மன்னிக்கப்படுவதில்லை, இன்றைய சமுதாயத்தில். திருடனுக்குத் தண்டனை தரும் அளவோடு தீர்ந்தது, சட்டம்.

🞸🞸🞸

ஏன் திருடினான், திருடன் திருந்திட வழி என்ன? என்று எண்ணிப் பார்த்து, திருடர்கள் ஏற்படும், ஏற்படக் காரணமான நிலைமைகளை, நினைப்புகளை, கொடுமைகளை, சக்தியற்ற சூழ்நிலையை மாற்ற, மாற்றி நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டாமோ?

🞸🞸🞸

சூழ்நிலையால் பொய் பேசும் மனிதன் தனது சூழ்நிலையை மாற்றிக் கொண்டு, நல்லவனாக மாற மார்க்கம் அமைக்க எண்ணி, துணிந்து நல்ல வழியிலே காரிய மாற்றும் சந்தர்ப்ப மளித்தால், மாற முடியாத நல்லவனாக, பொய் பேசாதவனாக முடியும்.

🞸🞸🞸

தனி மனிதனது தரமும் பண்பும் மட்டுமே போதாது சமுதாயமும், மனித இனமும் சீர்பட - திருந்த - நல்வாழ்வு வாழ, மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் நல்லநிலை, நல்ல சூழ்நிலை தேவை, மிகமிகத் தேவை என்றுதான் கூறுகிறேன்.

🞸🞸🞸

மனிதனது தரமும் பண்பும், குறிப்பாக, மனித வாழ்வு மனிதத் தன்மையோடு கூடிய நல்ல வாழ்வாக

அ. 4--600