பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


அமைவது மனிதனது சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கிறது என்பது நன்கு தெரிகிறது; மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது.

🞸🞸🞸

சூழ்நிலை மனிதனை இயக்குகிறது; மனிதன் சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டே வாழ்கிறான்; வாழவேண்டியிருக்கிறது!

🞸🞸🞸

உலகம் தட்டையல்ல! நீண்ட சதுர வடிவமானதல்ல! தட்டைப் போலத்தான் கண்ணுக்குத் தோன்றுகிறது. ஆனால், கருத்தூன்றிக் கவனித்தால் உலகம் ஒரு உருண்டை வடிவமானது என்று முதன் முதலில் கூறிய கலீலியோ கல்லடிப்பட்டார். கசடன்--கடவுள் தன்மைக்கே விரோதி என்று தூற்றுதல் மொழிகளுக்கெல்லாம் ஆளானார்.

🞸🞸🞸

கேலிக்கும், கண்டனத்திற்கும், கல்லடிக்கும், சொல்லடிக்கும் கலங்கிடாது, எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும் அஞ்சாது, எண்ணத் தெளிவோடு தனது சிந்தனையின் முடிவை, உலகம் தட்டையல்ல--உருண்டை என்ற உண்மையை உலகினர்க்கு உணர்த்திடத் தயங்கிடவில்லை அந்தக் கலீலியோ அந்தக் காலத்திலே!

🞸🞸🞸

எந்தத்துறையிலும், எந்த விதக் கருத்து மாறுதல்களுக்கும் ஆரம்பத்திலேயே ஆதரவு கிடைத்திடாது என்ற எண்ணத்தைக் கொண்டு எதிர்ப்பு, ஏளனம், தடை, தண்டனை இவற்றைக் கண்டு இதற்கெல்லாம் மனித இனம் கட்டுப்பட்டு நின்றுவிட்டால்--நின்று