பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


விட்டிருந்தால் மனித வாழ்வில் எத்தகைய மாறுதல்களும், முன்னேற்றமும் ஏற்படமுடியாது. ஏற்பட்டிருக்க முடியாது.

🞸🞸🞸

நல்ல மாந்தோப்பு அமைய--நல்ல களம்--விளை நிலம் எப்படி முக்கியமாகிறதோ--மூலமுமாகிறதோ அப்படியே தான் மனிதன் தரமும், பண்பும் படைத்தவனாக நல்ல வாழ்வு--நாகரிக வாழ்வு வாழவேண்டுமானால், மனிதன் வாழ்ந்திடும் களம்--நிலம், சமுதாயம் சமுதாயத்தின் நிலை, சூழ்நிலை முக்கியமாகிறது--மூலமும் ஆகிறது!

🞸🞸🞸

சமுதாயம், மனித சமுதாயம் தனது முக்கிய தேவைகளை உணவு, உடை, வீடு என்ற மூன்று, முக்கிய, முதற் தேவைகளை முழு அளவில்--தேவையான அளவில், தேவையான நேரத்தில் பெற்று, திருப்தியான வாழ்வு வாழ்ந்திட, வாய்ப்பும், வசதியும் பெற்றாக வேண்டும்.

🞸🞸🞸

மனித வாழ்வு--இன்றைய மனித வாழ்வு எத்தனையோ மனப்போராட்டங்களிடையேயும் சுருங்கக் கூறுமிடத்து, வசதியையும், வாய்ப்பையும்--சமயத்தையும் சந்தர்ப்பத்தையும்--அறிவையும், ஆற்றலையும்--அறியாமையையும், அஞ்ஞானத்தையும்--பெருமளவு விஞ்ஞானத்தையும் துணைகொண்டு நடந்திடும் நிலையில் இருக்கிறது.

🞸🞸🞸

மனிதர் உணவை மனிதர் பறிப்பது மட்டுமல்ல, மனிதனை மனிதனே மனிதனாக மதிக்காத மனப்பான்மை, மனிதனை மனிதன் பிறப்பால் உயர்த்தியும்,