பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


தாழ்த்தியும், நிறுத்துப் பார்த்திடும் நேர்மையற்ற நிலை--மதம், சாதி, ஆண்டவன் தூதன், ஆண்டான் அடிமை. பிறப்பால் உயர்ந்தோன், பிறப்பால் தாழ்ந்தோன், ஏழை, பணக்காரன் இன்னும் எத்தனை எத்தனையோ முரண்பட்ட கொள்கையினிடையே சிக்கிச் சீரழியவில்லையா, இன்றைய சமுதாய வாழ்க்கை!

🞸🞸🞸

எத்தனையோ சிக்கல்களுக்கிடையே--முரண்பட்ட மூடநம்பிக்கைகளுக்கிடையே அறிவாளி அறிவற்றவனையும்--இருப்பவன் இல்லாதவனையும்--பலமுள்ளவன் பலமற்றவனையும்--சுரண்டிச் சுகபோகியாக வாழ்ந்திட வாய்ப்பும் வசதியும் அமைந்ததாகத்தானே இன்றைய சமுதாயம் இருக்கிறது!

🞸🞸🞸

விடுவிக்க முடியாத வாழ்வுச் சிக்கல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளும், மூட நம்பிக்கைகளும், சுய சிந்தனையற்ற, சலிப்பான சத்தற்ற வாழ்க்கை முறையுமேதான் இன்றைய வாழ்வை--மனித வாழ்வை மிருக நிலைக்கே மீண்டும் மீண்டும் கொண்டு செல்கின்றன!

🞸🞸🞸

வாழ்வுச் சிக்கல்களை சீர்படுத்தி செப்பனிட்டு முரண்பட்ட கொள்கைகளிலே தெளிவடைந்து, மூட, நம்பிக்கைகளை முறியடித்துச் சுய சிந்தனையாளனாக மனிதன் மாறிட வேண்டாமா!

🞸🞸🞸

ஏன் வாழ்விலே சிக்கல்கள் ஏற்படுகின்றன? எத்தகைய முரண்பட்ட கொள்கைகள் நீக்கப்பட