பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


வேண்டும்? மூட நம்பிக்கையால் ஏற்படும் முட்டுக் கட்டைகள் என்னென்ன? எவையெவை? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துச் சிந்தித்து சிந்தனைத் தெளிவு பெற்று தெளிந்த வாழ்வு--திருப்தியான வாழ்வு மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் வாழ்வு. நாகரிக வாழ்வு--நல்ல வாழ்வு வாழ வேண்டாமா. மக்கள்!

🞸🞸🞸

நாகரிக வாழ்வு--நல்ல வாழ்வு வாழ்ந்திட மக்களைத் தயார் செய்திடுவதே இன்றைய பணி--முதற்பணி--முக்கியபணி--மக்கட்பணி!

🞸🞸🞸

மக்களிடையே மத மூட நம்பிக்கைகளைப் போக்கி சாதி, சமய பேதங்களையகற்றி, சமத்துவத்தையும், சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தி, அஞ்ஞானத்தை நீக்கி விஞ்ஞான உணர்வை ஊட்டித் தன்னம்பிக்கையையும். தளராத உழைப்பையும், ஊக்கத்தையும், உண்டாக்கித் தீரவேண்டும்!

🞸🞸🞸

மக்கள் வாழவேண்டும். உலகம் உருப்படவேண்டும். வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது, எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா! இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்கள் யாரையாவது காட்டமுடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.

🞸🞸🞸

புராணங்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும், எந்தக் கடவுளும் யோக்கியமான கடவுள்களாகத்