பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


தெரியவில்லையே! பிரமன் திலோத்தமையைக் கெடுத்தான்; சிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினியைக் காமுற்றான், இந்திரன் அகலிகையையும், சந்திரன் குருபத்தினி தாரகையையும், மகாவிஷ்ணு சந்திரன் மனைவியையும் கெடுத்தனர். இப்படித்தான் புராணங்கள் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடவுளரையா நாம் நமது வாழ்வின் வழிகாட்டிகளாகக் கொள்வது?

🞸🞸🞸

நாங்கள் எடுத்துக்காட்டி விளக்குவதும், ஆபாசங்கள் என்று கூறிக் கண்டிக்கும் ஆண்டவனின் திருவிளையாடல்களும் எங்கள் கற்பனைகள் அல்லவே அல்ல? அவைகள் அத்தனையும் பக்தர்கள், பக்தியோடு படித்துப் பாராயணம் செய்துவரும் புராணங்களில் காணப்படுபவைதான் என்பதை ஆத்திக நண்பர்கள் உணர்ந்து திருந்தவேண்டுகிறேன்.

🞸🞸🞸

ஏதோ சில காரியங்களைச் சடங்குகள் என்றும் சாஸ்திர முறைகள் என்றும் பழைய வழக்கங்கள் என்பதற்காக மட்டும். எந்தவிதமான காரணங்களுமின்றி நம்மையறியாமலேயே நாம் செய்து வருகிறோம். இவைகளைத்தான் நாம், சரியா? தேவைதானா? என்று சீர்தூக்கிப் பார்த்து முடிவுகட்ட வேண்டும்.

🞸🞸🞸

கொட்டாவி விடும்போது மூன்றுதரம் சிட்டிகை போடுவதும், போகும்போது எதிரே பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை யென்று திரும்பிவிடுவதும், பல்லி சொல்லுக்குத் தரையைத் தட்டுவதும், அதற்குப்