பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


பலன் பார்த்துப் பதைப்பதும் மக்களிடம் எப்படியோ ஏற்பட்டுவிட்ட பழக்கத்தினாலும், அறியாமையினாலுந் தான்.

🞸🞸🞸

மனிதன், தான் வாழவேண்டும்; தன்னைப் போலவே பிறரும் வாழவேண்டும். மனிதர் எல்லோரும் மனித ராகவே வாழ்ந்திடவேண்டும் என்ற மனப்பண்பைக் கொண்டவனாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான், மனித இனம் ஒன்றுபட்டு, நாகரிக வாழ்வு வாழ முடியும்.

🞸🞸🞸

அர்த்தமற்ற திருப்தியும், வெறுப்பான வாழ்வும், சாவை எதிர்நோக்கிய சஞ்சல புத்தியும், கொண்ட சத்தற்ற வாழ்வுதான், இன்றைய மக்களின் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கை நிலை; வாழ்க்கைத்தரம்!

🞸🞸🞸

வாழ்க்கை வாழ்வதற்கே,வாழவேண்டும். வளமாக வாழவேண்டும், வாழத்தான் வேண்டும், வாழ்ந்தே தீருவோம்; வாழ்க்கையைப் பற்றிய கருத்து இப்படித் தானே இருக்கவேண்டும், மக்களுக்கு!

🞸🞸🞸

தமிழர், தாழ்ந்ததற்குக் காரணம், தமிழகத்தில் தமிழரது எண்ணங்களில் ஏற்பட்ட, பக்தி, புராணம் மோட்சம், நரகம், மேலுலக வாழ்வு, கர்மம், வினை, விதி என்பன போன்ற கருத்துக்கள் புகுந்து ஆதிக்கம் செலுத்தினதுதான் என்பது நன்கு விளங்கும்!

🞸🞸🞸

மனிதன், மனிதனாக வாழவேண்டும், மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தேவை!